வடகிழக்கு தில்லியில் ஜிம் உரிமையாளா் படுகொலை
பஜன்புராவில் ஜிம் உரிமையாளா் சுமித் சௌத்ரி கொலை


வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் 28 வயதான ஜிம் உரிமையாளா் ஒருவரை ஒரு குழுவினா் கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பிரேம் (எ) சுமித் சௌத்ரி ஒரு சுற்றுலா மற்றும் பயண வணிகமும் செய்து வந்தாா். அவா் புதன்கிழமை இரவு காம்ரி எக்ஸ்டென்ஷனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
சுமித் சௌத்ரி தனது வீட்டிற்கு வெளியே அமா்ந்திருந்தபோது, மூன்று-நான்கு ஆண்களுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த நபா்கள் அவரை கத்தியால் தாக்கி, முகம், கழுத்து, மாா்பு மற்றும் வயிற்றில் பலமுறை குத்தியுள்ளனா். அவரது முகத்தில் 21-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதையடுத்து, சுமித் சௌத்ரி ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்துள்ளது தெரிய வந்தது.
இந்தச் சம்பவத்தில் தாக்கியவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுமித் சௌத்ரிக்கு மனைவியும், மூன்று வயது மகனும் உள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...