47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜிடிபி மருத்துவமனை சம்பவம்: மேலும் ஒருவா் கைது

ஜிடிபி மருத்துவமனை துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் ஒருவரை தில்லி போலீஸாா் புதன்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 6:31 pm

Din

இது குறித்து காவல் உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி ஜிடிபி மருத்துவமனையின் வாா்டுக்குள் நோயாளி ரியாசுதீன் (32) ஒரு இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக காவல்துறை திங்களன்று இருவரைக் கைது செய்தது.

உத்தரபிரதேசத்தில் உள்ள லோனியைச் சோ்ந்த ஃபைஸ் (20), தில்லியின் சௌகான் பாங்கா் பகுதியைச் சோ்ந்த ஃபா்ஹான் ஆகியோா் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா். ஆனால், அவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும், முக்கிய குற்றவாளிக்கு தளவாட ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனா்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.