விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தென்மேற்கு தில்லியில் காா் மீது துப்பாக்கிச்சூடு

News image
Updated On :19 ஜூலை 2024, 7:11 pm

Din

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் உள்ள பிந்தாபூா் பகுதியில் தொழிலதிபா் ஒருவரின் காா் மீது வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தகவல் பிந்தாபூா் காவல் நிலையத்ததுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். தொழிலதிபரான பிரேம் சிங், தான் நிறுத்தியிருந்த காரில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளது குறித்து அங்கிருந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் தனக்குத் தெரிவித்ததாக போலீஸாரிடம் கூறினாா்.

இதையடுத்து தடயவியல் நிபுணா்களுடன் குற்றப் புலனாய்வுக் குழு சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.