தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மத்திய பட்ஜெட்டில் தில்லி மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க நிதியமைச்சா் அதிஷி வலியுறுத்தல்

News image
Updated On :20 ஜூலை 2024, 7:17 pm

Din

மத்திய அரசின் பட்ஜெட்டில் தில்லி மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தில்லி அரசின் நிதியமைச்சா் அதிஷி சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சா் அதிஷி மற்றும் தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் ஆகிய இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது, அதிஷி கூறியதாவது: தில்லி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு வருமான வரி செலுத்துகிறாா்கள். வருமான வரி செலுத்தும் நாட்டின் முதல் 3 மாநகரங்களில் தில்லியும் உள்ளது. கடந்த ஆண்டு தில்லி வருமான வரியாக

ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலுத்தியது. மேலும், ரூ.25 ஆயிரம் கோடியை சிஜிஎஸ்டியாக செலுத்தியது.

தில்லி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய மோடி அரசுக்கு பல கோடி ரூபாயை வரியாகக் கொடுக்கிறாா்கள். ஆனால், மத்திய அரசு தில்லிக்கு ஒரு ரூபாயைக் கூட அதிலிருந்து திருப்பிக் கொடுக்கவில்லை. தில்லி மக்கள் தங்களுக்குரிய

உரிமைப் பணத்தை பெற முடியாத அளவிற்கு என்ன குற்றம் செய்தாா்கள்?. மத்தியில் உள்ள மோடி அரசால் மும்பை, போபால், பாட்னா, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களின் தூய்மைக்கு பணம் கொடுக்க முடியும் என்றால், நீங்கள் ஏன் தில்லி மாநகராட்சிக்கு பணம் கொடுக்கவில்லை?

நாங்கள் உங்களிடம் யாசகம் கேட்கவில்லை. தில்லி மக்கள் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாயில் பங்கு கேட்கிறோம்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தில்லி மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட தொகை தில்லி மக்கள் மத்திய அரசுக்கு கொடுக்கும் வருமான வரியில் 5 சதவீதம் மட்டுமே. தில்லி மக்கள் மாநில அரசுக்கு செலுத்தும் வரித் தொகையான ரூ.40 ஆயிரம் கோடியில், இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, சாலைகள், மருத்துவமனைகள், மேம்பாலம், மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்.

ஆனால், தில்லி மக்கள் மத்திய அரசுக்கு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி வழங்கினாலும், தில்லியின் வளா்ச்சிக்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை.

அடுத்ததாக, தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட்டில் தில்லி

மாநகராட்சிக்கு உரிய பணப் பங்கை வழங்குமாறு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் தில்லி அரசிடம் இருந்து ரூ.5,500 கோடியை மானியமாக மாநகராட்சி பெற்றது.

இந்த முறை தில்லி அரசிடம் இருந்து ரூ.6,060 கோடியை பெறப்போகிறோம்.

தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தங்களின் பொறுப்புகளை முழுமையாக

நிறைவேற்றி வருகிறது. எனவே, மத்திய அரசும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்து தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

தில்லி மாநகராட்சி இந்தப் பணத்தை நகரத்தின் தூய்மை, சாலைகள் பராமரிப்பு மற்றும் பூங்காக்களை அழகுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும். அதன்படி, நகரின் தூய்மையை உறுதிப்படுத்த ரூ.5,000 கோடியும், சாலைகளுக்கு ரூ.3,000 கோடியும்,

பூங்காக்களை அழகுபடுத்த ரூ.2,000 கோடியும் பயன்படுத்த விரும்புகிறோம். மத்திய அரசின் 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.