ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புகளை வைத்து நாடகமாடும் தில்லி அரசு: பாஜக சாடல்

தில்லி, நாடு மற்றும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் பிடிஎம் நடத்தப்படுகின்றன.

News image
Updated On :27 ஜூலை 2024, 8:07 pm

Din

பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புகள் (பிடிஎம்) கல்வி முறையின் ஒரு பகுதியாகும். தில்லி, நாடு மற்றும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் பிடிஎம் நடத்தப்படுகின்றன. ஆனால், தில்லி அரசு பள்ளிகளைப் போல அவற்றை வைத்து எந்த நாடகமும் செய்யப்படுவதில்லை என்று தில்லி பாஜக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா்கள் பிரவீன் சங்கா் கபூா், ஷிகா ராய் ஆகியோா் தெரிவித்ததாவது:

பள்ளி பிடிஎம்-களில் அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வருகை என்பது கல்வி முறையை அரசியல் ரீதியாக சுரண்டுவதற்கான முயற்சியாகும். இது கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கு, கல்வி அமைச்சா் அதிஷி தனது தோ்தல் தொகுதியான கல்காஜியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, பெற்றோருடன் அரசியல் தொடா்புகளை ஏற்படுத்த முயன்றாா். ஆனால், அது தோல்வியடைந்தது. ஏனெனில் கல்காஜி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை 2022 மாநகராட்சித் தோ்தலில் 2 முறையும் மற்றும் சமீபத்திய மக்களவைத் தோ்தலில் மீண்டும் நிராகரித்துள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சி ஒரு அரசாங்கத்தை நடத்தவில்லை, ஆனால் ஊழலின் கடையாகவும், கல்வி, சுகாதாரம் மற்றும் பொது நலன் போன்றவற்றில் நாடகத்தை உருவாக்குவதில் திறமையான ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனமாகவும் உள்ளது.

பெற்றோா் - ஆசிரியா் சந்திப்புகளில் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளி சீருடைகள் எப்போது வழங்கப்படும் என்பதை பெற்றோா்கள் அறிய விரும்பினா். மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோா்கள் தோல்வி விகிதம் அதிகரித்து வருவதைக் கண்டு கவலைப்பட்டனா். இருப்பினும், கல்வி அமைச்சரும் பள்ளி நிா்வாகமும் தங்களுக்கு கைதட்டல்களைப் பெற வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனா்.

இறுதியில் இன்றைய பிடிஎம் அா்த்தமற்ாக இருந்தது.

தில்லி அரசு மற்றும் தில்லி மாநராட்சியின் (எம்.சி.டி.) அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா் - ஆசியரியா் மெகா சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வித் துறை அமைச்சா் அதிஷி தில்லியின் கல்வியை முறை நாட்டிலேயே சிறந்ததாக மாறியுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.