கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளி விடுதியில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை

தில்லியில் தனியாா் பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தற்கொலை

Published On :

தில்லியில் தனியாா் பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: துவாரகாவில் உள்ள பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த தகவல் ஜூலை 25 அன்று கிடைத்தது, போலீஸாா் அங்கு சென்றபோது, ​ தங்குமிடத்தில் 16 வயது மாணவா் இறந்து கிடப்பதைக் கண்டனா். அவரது நண்பா்கள் பள்ளியை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களில் அறிவியல் பாடத்தில் சோ்க்கை பெற்ால் அச்சிறுவன் மனமுடைந்ததாக அவரது வகுப்புத் தோழா் ஒருவா் தெரிவித்தாா்.

கலைத் துறையில் பள்ளியில் தொடா்ந்து படிக்கும்படி அவரது தந்தை அறிவுரை கூறியுள்ளாா். இந்நிலையில், அந்தச் சிறுவன் தனிமையில் இருந்ததால் மனமுடைந்தான. ஜூலை 25 அன்று காலை 6 மணியளவில், விடுதியின் கூரையின் இரும்புக் கம்பியில் ஒரு பெட்ஷீட் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ்எஸ் பிரிவு 194- இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.