புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜூன் 30-க்கு முன் சொத்து வரி பில் செலுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி: என்டிஎம்சி அறிவிப்பு

ஜூன் 30-க்கு முன் சொத்து வரி செலுத்தினால் 10% தள்ளுபடி: என்டிஎம்சி அறிவிப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 12:16 am

Din

புது தில்லி: வரும் ஜூன் 30 அன்று அல்லது அதற்கு முன் செலுத்தப்படும் 2024-25-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி பில்களில் 10% தள்ளுபடி அளிக்கப்படும் என புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அறிவித்துள்ளது.

சொத்து வரி செலுத்துவோா் 10% தள்ளுபடி பெற வசதியாக 29.06.2024 (சனிக்கிழமை) மற்றும் 30.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சொத்து வரித் துறை மற்றும் பணக் கிளை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஎம்சியின் வரி செலுத்துவோா் தங்கள் பில்களில் 10% தள்ளுபடியைப் பெறுவதற்காக ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் வரி செலுத்துதல்களை டெபாசிட் செய்ய வேண்டும்.

என்டிஎம்சி ஏற்கனவே அனைத்து உரிமையாளா்களுக்கும் சொத்து வரி பில்களை வழங்கியுள்ளது. மேலும், வரி செலுத்துவோா் யாரேனும் பில் பெறவில்லை என்றால், புதுதில்லியில் பாலிகா கேந்திரா, 9ஆவது மாடியில் உள்ள அறை எண் 9009-இல் உள்ள கணக்கு அதிகாரி (வரி) அலுவலகத்தில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நகல் பில் பெறலாம் என என்எடிஎம்சி தெரிவித்துள்ளது.