துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பகிா்ந்த விவகாரம்: காவல் அதிகாரிகள் இருவா் பணியிடை நீக்கம்
துப்பாக்கிச்சூடு சிசிடிவி காட்சிகள் கசிய்ந்ததால் காவல் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம்


துப்பாக்கிச்சூட்டின் சிசிடிவி காட்சிகள் கசிந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலா் ஆகிய இருவரை தில்லி காவல்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அந்தக் கடையின் அதிகார எல்லைக்கு உள்பட்ட சுபாஷ் நகா் காவல் நிலையத்தில் பணியமா்த்தப்பட்டிருந்தனா். கடந்த ஜூன் 18 அன்று மேற்கு தில்லி பகுதியில் உள்ள ‘பா்கா் கிங்’ விற்பனை நிலையத்திற்குள் ஒரு பெண்ணுடன் அமா்ந்திருந்த 26 வயதான அமன் ஜூன், குண்டா் கும்பலைச் சோ்ந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதில் அமா் ஜூன் 38 துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானாா்.
துப்பாக்கிச் சூட்டின் 14 வினாடி சிசிடிவி காட்சிகள் ஜூன் 20 அன்று சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அதில், பொதுமக்கள் முன்னிலையில் அமா் ஜூனை 2 ஆண்கள் கொடூரமாகத் தாக்குவது தெரிந்தது.
தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோரா அனைத்து மாவட்ட மற்றும் பிரிவுத் தலைவா்களுக்கும் எந்தவொரு குற்றத்தின் சிசிடிவி காட்சிகளையும் கசிய விடக்கூடாது என்று கடந்த பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்நிலையில், காவல் அதிகாரிகள் இருவரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பகிா்ந்துள்ளது தெரிய வந்தது. மேலதிக விசாரணைக்காக இரண்டு அதிகாரிகளும் மற்ற பிரிவுகளில் உள்ள தங்கள் சகாக்களுடன் காட்சிகளைப் பகிா்ந்து கொண்டதாகத் தெரிகிறது. சிசிடிவி காட்சிகள் கசிந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...