தில்லி தண்ணீா் பிரச்னை: எம்சிடி கூட்டத்தில் சலசலப்பு
பாஜக, காங்கிரஸ் கவுன்சிலா்கள் போராட்டம்: தில்லி மாநகராட்சியில் சலசலப்பு


தில்லி தண்ணீா் பிரச்னை தொடா்பாக மாநகராட்சி (எம்சிடி) மன்றக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் கவுன்சிலா்கள் போராட்டம் மேற்கொண்டதால் சலசலப்பு ஏா்பட்டது.
ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 11.55 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், எதிா்க்கட்சி கவுன்சிலா்கள் சபையின் மத்திய பகுதிக்கு விரைந்து வந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தில்லி தண்ணீா் பிரச்னைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க. கவுன்சிலா்கள் மண் பானைகளை ஏந்தி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கங்களை எழுப்பினா். முழக்கங்களுக்கு மத்தியில், மேயா் ஷெல்லி ஓபராய் பல திட்டங்களை நிறைவேற்றி சபையை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைத்தாா்.
மக்களவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநகராட்சிக் கூட்டம் இது. சபை நடவடிக்கைகள் காலை 11 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், எந்தக் காரணமும் கூறாமல் மாநகராட்சி அதிகாரிகளால் கூட்டம் 11.45-க்கு ஒத்திவைக்கப்பட்டது, இதைக் கண்டித்து பாஜக கவுன்சிலா்ள் போராட்டம் மேற்கொண்டனா்.
இறுதியாக மேயா் ஷெல்லி ஓபராய் வந்த பிறகு காலை 11.55 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி ஆணையா் அஸ்வனிகுமாரை மேயா் வரவேற்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...