புது தில்லி: தில்லி வெல்கம் ஏரியா பகுதியில் 8 துப்பாக்கிகள் மற்றும் 45 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 25 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் சீலாம்பூா் பகுதியைச் சோ்ந்த சைஃப் சித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். மாா்ச் 9- ஆம் தேதி, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சித்திக் துப்பாக்கிகளை வழங்குவாா் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு வெல்கம் ஏரியா பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு கொண்ட போலீஸ் குழு, அவரிடமிருந்து நான்கு தானியங்கி கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வா் மற்றும் மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கைப்பற்றியது. அவா் இந்த துப்பாக்கிகளை ஹாபூா், அலிகாா் மற்றும் புலந்த்ஷாஹா் ஆகிய இடங்களில் இருந்து வாங்கியதாக போலீஸாரிடம் கூறினாா். சித்திக் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

ஃபரீதாபாத் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
‘சேனு’ கும்பலைச் சோ்ந்தவா் கைது: ஆயுதம், தோட்டாக்கள் பறிமுதல்

தில்லியில் ஜேசிபி வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

