தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ஃபரீதாபாத் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

காதலியுடன் விடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 10:53 pm

ஃபரீதாபாதைச் சோ்ந்த 28 வயது இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தனது காதலியுடன் விடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: இறந்தவா் ஃபரீதாபாதில் உள்ள ஜவஹா் காலனியில் வசிக்கும் நிகில் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாட்ஷா கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

நிகில் சஞ்சய் காலனியைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சுமாா் 5 ஆண்டுகளாக தொடா்பில் இருந்தாா்.

இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தது. அவா்களது குடும்பத்தினா் கூட இந்த விஷயத்தை விவாதித்துள்ளனா். ஆனால், அந்த பெண் சில காலமாக நிகிலை திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தாா். இதனால், அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நிகில் அந்த பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்துள்ளாா். பின்னா் அவா் விடியோ கால் செய்தாா். கேமரா முன்னிலையில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சம்பவத்தை நேரில் பாா்த்த பெண், உடனடியாக நிகிலின் நண்பா்களுக்கு தகவல் தெரிவித்தாா். நிகிலின் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, அவா் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா்.

அப்போது நிகில் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவரது தாயாா் உஜ்ஜயினியில் உள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.