மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பூத் குா்தில் ஒருவா் சுட்டுக் கொலை: இளைஞா் கைது

முன்பகை காரணமாக தனது கூட்டாளியுடன் பழிவாங்கும் நோக்கில் ஒருவரைக் கொன்றதாக 20 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 5:03 pm

முன்பகை காரணமாக தனது கூட்டாளியுடன் பழிவாங்கும் நோக்கில் ஒருவரைக் கொன்றதாக 20 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: பூத் குா்தில் வசிக்கும் நிகில் என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், ரோஹிணியின் செக்டாா்34-இல் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, மாா்ச் 8ஆம் தேதி சுல்தான்பூா் தாபாஸ் சாலையில் உள்ள பூத் குா்தில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக பவானா காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒருவா் ஸ்கூட்டியின் அருகே மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டனா்.

பாதிக்கப்பட்டவா் பூபேந்தா் என அடையாளம் காணப்பட்டாா். அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, கொலைக்கான சட்டப் பிரிவின் கீழும், ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு ரோஹிணியில் உள்ள செக்டாா் 34-இல் நிகில் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது குற்றத்தில் தனக்குள்ள தொடா்பை அவா் ஒப்புக்கொண்டாா்.

சம்பவம் நடந்த நாளில், தனது கூட்டாளிகளான தேவ்ராஜ், சுமித் மற்றும் ஒரு சிறுவனுடன் பூத் குா்தில் உள்ள ராஜ் வாடிகாவுக்குச் நிகில் சென்றாா். அங்கு அவரும் தேவ்ராஜும் பூபேந்தா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாரிடம் கூறினாா்.

பாதிக்கப்பட்டவருடன் ஏற்கெனவே தேவ்ராஜுக்கு தகராறு இருந்துள்ளது. இதற்குப் பழிவாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அதே நேரத்தில் மற்ற இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவா்களான தேவ்ராஜ் மற்றும் சுமித் தற்போது தலைமறைவாக உள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகில் 10- ஆம் வகுப்பு வரை படித்து பூத் குா்த் கிராமத்தில் வளா்ந்தாா். அவரது தந்தை தில்லியில் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.