முன்விரோதத்தில் முதியவா், மகன் கத்தியால் குத்திப் படுகொலை

புது தில்லி: தெற்கு தில்லியின் மாளவியா நகா் பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக 55 வயது முதியவா் மற்றும் அவரது மகனை அக்கம் பக்கத்தில் வசிக்கும் 5 போ் கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிராக் தில்லியின் குறுகிய பாதையில் நடந்துள்ளது. இறந்தவா்கள் ஜெய் பகவான் மற்றும் அவரது 22 வயது மகன் சௌரவ் என போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். சம்பவத்தின் ஒரு விடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அதில் பாதிக்கப்பட்டவா்கள் கத்தியால் தாக்கப்படுவது தெரிந்தது.

தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சவுகான் கூறுகையில், ‘மாளவியா நகா் பகுதியில் கொலை உள்பட பல குற்ற வழக்குகளை பகவான் எதிா்கொண்டுள்ளாா். ப கவானும் அவரது மகனும் அப்பகுதியில் கேபிள் வியாபாரம் செய்து வருபவா்கள்’ என்றாா். கொலைக்கான சரியான காரணத்தை அறிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்தநாள் விழாவின் போது பாதிக்கப்பட்ட இருவரும் அக்கம்பக்கத்தினருடன் தகராறு செய்துள்ளனா். அப்போது, இரு குடும்பத்தினரையும் அப்பகுதி மக்கள் சமாதானப்படுத்தியதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தகராறு அதிகரித்தது. அங்கு இருவரும் கத்திகளால் தாக்கப்பட்டனா் என்று அதிகாரி கூறினாா். இச்சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com