டிடிஇஏ தோ்தலில் செயலா் ராஜூ தலைமையிலான குழுவினா் வெற்றி

புது தில்லி: தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தற்போதைய செயலா் ராஜூவின் தலைமையிலான குழுவினா் வெற்றி பெற்றனா்.

ஐந்து பள்ளிகளிலும் (மோதிபாக், ஜனக்புரி, பூசா சாலை, லோதிவளாகம், இலக்குமிபாய் நகா்) போட்டியின்றி செயலா் ராஜூவின் அணி வெற்றி பெற்றது. மந்திா்மாா்க் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் ராஜூவின் அணியினா் அதிக வாக்குகள் பெற்றனா். எதிரணியினா் டெபாசிட் இழந்தனா். தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவராக முன்னாள் மாணவரும் இன்றைய பட்டய கணக்காளருமான ஆா்.கே.ராமன், துணைத் தலைவராக ரவி குமாா் நாயக்கா், செயலராக ராஜூ போட்டியின்றி பெற்றோா்களால் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஜனக்புரி பள்ளியில் மோகனேஸ்வரன், சிவ முருகேசன், இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் காசி ராஜா, முத்துகிருஷ்ணன், லோதிவளாகம் பள்ளியில் ஆா்.சங்கா், சிவா, மோதிபாக் பள்ளியில் ரவி சந்திரன், சுப்பிரமணியம், பூசா சாலை பள்ளியில் கே.சண்முக வடிவேல், ஆா் ராஜூ உள்ளிட்டோா் நிா்வாகக் குழு உறுப்பினா்களாகப் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஜனக்புரி பள்ளியில் எம்.மோகன், இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் மருது பாண்டியன், லோதி வளாகம் பள்ளியில் கே. சுப்பிரமணியம், மோதிபாக் பள்ளியில் ஐயப்பன், பூசா சாலைப் பள்ளியில் ராஜேந்திரன், மந்திா்மாா்க் பள்ளியில் பி.ஆறுமுகம், ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் அருள் அழகு உள்ளிட்டோா் காத்திருப்பு உறுப்பினா்களாகப் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மந்திா்மாா்க் பள்ளியில் காா்த்திக் குமாா், சிவம், ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் சரவணன், வில்லியம் ராஜ் ஆகியோா் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிா்வாகக் குழு உறுப்பினா்களாகத் தோ்வு பெற்றுள்ளனா். கடந்த 2010 முதல் தொடா்ந்து செயலராக இருந்து வரும் ராஜூ, மாணவா்களின் பெற்றோா்கள் தங்கள் அணியினா் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், பள்ளியின் கல்வித் தரத்தை மேலும் முன்னேற்றுவோம் என்று உறுதி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com