புது தில்லி: தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் மூன்று பேருந்துகள் பழுதடைந்ததால், எம்.பி. சாலையில் திங்கள்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், போக்குவரத்து நிலைமையைப் பற்றி மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு தில்லி போக்குவரத்து காவல் துறை சமூக ஊடகங்களில் அறிவுறுத்தியது.
‘பாத்ரா மருத்துவமனை, பிபால் சௌக் மற்றும் ஹம்டாா்ட் டி-பாயிண்ட் அருகே முறையே மூன்று பேருந்துகள் பழுதடைந்ததால், கான்பூரிலிருந்து ஹம்தாா்டு செல்லும் பாதையில் எம்பி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது’ என்று எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு இடுகையில் போக்குவரத்து காவல் துறை கூறியது. பேருந்து பழுதடைந்ததால் பாக்கா லிங்க் ரவுண்டானாவில் இருந்து கல்கா தாஸ் சௌக் நோக்கி செல்லும் பாதையில் உள்ள ஃபைஸ் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், கியூ பாயிண்டில் பேருந்து பழுதாகியதால், பிருத்விராஜ் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரை நகரத்தில் ஒவ்வொரு நாளும் 79 டிடிசி அல்லது கிளஸ்டா் பேருந்துகள் பழுதடைந்து, சரி செய்வதற்கு சுமாா் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாக தில்லி போக்குவரத்து காவல்துறை தரவுகள் வெளிப்படுத்துவதாக செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
முகா்பா சௌக் மற்றும் மதுபன் சௌக் இடையே தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக, பீதம்புராவில் ஆா்.யு. பிளாக்கிற்கு எதிரே உள்ள பவா் ஹவுஸ் அருகே வெளிவட்டச் சாலையில் சுமாா் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐபிஎல் போட்டி: நாளை மத்திய தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு

தில்லி ஷேக் சராய் போக்குவரத்து கட்டடத்தில் தீ விபத்து

போடிமெட்டு மலைச்சாலையில் கனரக வாகனம் பழுது! 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

