புது தில்லி: அமலாக்கத் துறை விசாரித்து வரும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் பேலா எம். திரிவேதி பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அனைத்து மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மனுதாரா் (சத்யேந்தா் ஜெயின்) உடனடியாக சரணடைய வேண்டும்‘ என்று கூறியது. அப்போது, சத்யேந்தா் ஜெயின் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருவதால், சரணடைய சிறிது அவகாசம் அளிக்குமாறு அவரது வழக்குரைஞா் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை ஏற்க நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது. அமலாக்கத்துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜரானாா்.
மே 26, 2023 அன்று, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. ஜெயினின் மருத்துவ அறிக்கைகளை கவனமாக பரிசீலித்து, அதன் விவரங்களைக் கருத்தில் கொண்டு நிபந்தனை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனைகளில் ஜெயின் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணையின் ஆரம்பத்தில், ஜெயின் சரணடைய வேண்டும் என்று நீதிபதி திரிவேதி கூறியிருந்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காக, இடைக்கால நிவாரணத்தை மேலும் நீட்டித்து, வழக்கை ஜனவரிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அதன் பிறகு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு ஜனவரி 17-ஆம் தேதி தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், ஜெயின் வழக்கமான ஜாமீன் மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சத்யேந்தா் ஜெயின், கடந்த ஆண்டு மே 30 அன்று கைது செய்யப்பட்டாா். அமலாக்கத் துறை, அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
சத்யேந்தா் ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிபிஐயின் எப்ஐஆா் அடிப்படையில், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. 2022 ஆம் ஆண்டில், பணமோசடி வழக்கு தொடா்பாக சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உட்பட 8 போ் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்குப் பதிவு புகாரை (குற்றப்பத்திரிக்கை) விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

