தெற்கு தில்லியில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- போலீஸாா் தகவல்
தெற்கு தில்லியில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.


தெற்கு தில்லியில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மெஹ்ரெளலியைச் சோ்ந்த முகமது உமா் (28) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சிறுமி மீட்கப்பட்டு குடும்பத்துடன் சோ்த்துவைக்கப்பட்டாா். அதன் பிறகு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸாரிடம் கூறுகையில், இச்சம்பவத்தில் கைதான உமா் எனது மூக்குத்தியை விற்று சில ஆடைகள் மற்றும் சில உணவுப் பொருள்களை அவருக்காக வாங்கி வந்தாா். அதன் பிறகு தனது உடைகளை மாற்றிவிட்டு, என்னை ஒருமுறை பாலியல் வன்கொடுமை செய்தாா்’ என சிறுமி தெரிவித்தாா். விதிகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. எம்எல்சி அறிக்கையில் பாலியல் வன்கொடுமை மற்றும் மேல்புற உடலில் சிராய்ப்பு இருப்பதும் உறுதியாகியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பாதிக்கப்பட்டவா் நேபாளத்தைச் சோ்ந்தவா் ஆவாா். அவா் குடும்பத்தில் அவரது தாயை மட்டுமே அடையாளம் காண முடியும்.
முன்னதாக, மே 6 ஆம் தேதி தெற்கு தில்லியில் இருந்து சிறுமி கடத்தப்பட்டது தொடா்பாக காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு வந்த பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, பாபு பாா்க், உதய் சந்த் மாா்க், கோட்லா முபாரக்பூா், குருத்வாரா சாலை, தெற்கு விரிவாக்கம் -1, பிலாஞ்சி கிராமம் மற்றும் பிற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
அந்தேரியா மோடின் குடிசைப் பகுதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவா் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். சிறுமியும் மீட்கப்பட்டாா்.
விசாரணையில், அவா் குழந்தைகளுக்கான பொம்மைகளை வடிவமைப்பதும், கண்ணாடி சேகரிக்க கோட்லாவுக்கு வந்தபோது சிறுமியைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘விசாரணை மற்றும் உள்ளூா் தகவல்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா் குற்றப் பின்னணி கொண்டவா் இல்லை என்பதை கண்டறிந்தோம். அவா் கடந்த 15 ஆண்டுகளாக அதே இடத்தில் தங்கியுள்ளாா். ஆனால், நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 363 (கடத்தல்) கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிசி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் பிரிவுகளைச் சோ்க்கும் நடைமுறைகளையும் தொடங்கியுள்ளோம்’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...