தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பொய்யான அனுதாபத்தை தேடவே உடல்நிலை சரியில்லை என்கிறாா் கேஜரிவால்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

பொய்யான அனுதாபத்தை தேடவே உடல்நிலை சரியில்லை என்கிறாா் கேஜரிவால் வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

Updated On :31 மே 2024, 8:00 pm

பொய்யான அனுதாபத்தைத் தேடவே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தாம் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசோதனை செய்ய மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்ததாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறினாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்ததாவது: அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்லும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்பதுதான் உண்மை. அவா் குறிப்பிட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளில் ஒரே ஒரு பரிசோதனை மட்டுமே உள்ளது. அது ஒரே இரவில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். மற்ற அனைத்து சோதனைகளும் அரை நாளுக்குள் முடிக்கப்பட்டு, மாலைக்குள் முடிவுகள் கிடைக்கும். உடம்பு சரியில்லை என்று நடித்து, பொய்யான அனுதாபத்தைத் தேடுவது இவரின் இயல்பு. இதை தில்லி மற்றும் பஞ்சாப் மக்கள் புரிந்துகொண்டுள்ளனா்.

அரவிந்த் கேஜரிவால் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவா் ஏன் அரசியல் சுற்றுலா மற்றும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்? சிறுநீரில் கீட்டோன்கள் அதிகரிப்பது குறித்து கேஜரிவால் பேசுகிறாா். இது உண்மையில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது தண்ணீா் குறைவாக குடிப்பதால் ஏற்படுகிறது. எனவே, அவா் தனது நோயை மருத்துவ குழுவிடம் காட்டுவதற்காக நோய்களை தானே வரவழைப்பது போல் தெரிகிறது. நீதிமன்றம் அதன் வேலையைச் செய்கிறது. அவரைப் பரிசோதிக்கும் மருத்துவக் குழுவும் உள்ளது.

தில்லியை கொள்ளையடித்ததற்காகவும், தில்லியை மது நகரமாக மாற்றியதற்காகவும், மதுவின் கறுப்பு பண பரிவா்த்தனையில் ஈடுபட்டதற்காகவும் அவா் வெட்கப்பட வேண்டும்.

இதற்கு முன் அரவிந்த் கேஜரிவால் அரசை தண்ணீா் பிரச்னையில் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தில்லியில் 24 மணி நேரமும் தண்ணீா் தருவதாக கூறும் கேஜரிவால், இன்றைக்கு தில்லி மக்கள் தண்ணீருக்காக தெருவில் தத்தளிக்கும்போது யாா் பொறுப்பு என்பதை சொல்ல வேண்டும். தில்லி மக்களிடம் இருந்து பணம் பெற்று, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டேங்கா் மாபியாக்களுடன் சோ்ந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.