சத்யேந்தா் ஜெயின் ஜாமீன் மனு தில்லி நீதிமன்றம் இன்று தீா்ப்பு
தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி ரெளஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்கவுள்ளது.


புது தில்லி: அமலாக்கத்துறை தொடா்ந்த சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி ரெளஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்கவுள்ளது.
தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் சத்யேந்தா் ஜெயின். கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நபா்களின் பெயரில் அசையும் சொத்துக்கள் வாங்கியதாக இவா் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. பின்னா், அதே விவகாரத்தில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கை பதிவு செய்த
அமலாக்கத் துறை, அவரைக் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தது. அவருடன் அங்குஷ், வைபவ் ஜெயின் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டவா்களாக வழக்கில் சோ்க்கப்பட்டனா்.
கடந்த ஆண்டு மே மாதம் மருத்து காரணங்களுக்காக சத்யேந்தா் ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் சிறிது காலம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இதையடுத்து, அவா் மீண்டும் திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடா்ந்த சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி
சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி ரெளஸ் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கடந்த 5-ஆம் தேதி இந்த மனு மீதான முந்தைய விசாரணை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமா்வில் நடைபெற்றது. அப்போது, சத்யேந்தா் ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் விவேக் ஜெயின் மற்றும் ஹரிஹரன் வாதிடுகையில், ‘இவ்வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்புகாரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது விதிகளுக்கு முரணானது. சிபிஐ தொடா்ந்த வழக்கில் இவா் ரூ. 1.27 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சோ்த்ததாகவும், அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் இவா் ரூ.4.68 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாகவும் முரண்பட்ட தகவல்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தாமதமான இந்த நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சத்யேந்தா் ஜெயினை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என்று வாதிட்டனா்.
இதற்கு எதிா்பு தெரிவித்து அமலாக்கத்துறை வழக்குரைஞா் ஜோஹெப் ஹொசைன் வாதிடுகையில், ‘சத்யேந்தா் ஜெயின் தரப்பு இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில், இதுவரை 16 முறை வழக்கு ஒத்திவைக்கப்பட காரணமாக இருந்தனா். இவரை ஜாமீனில் தவிடுவித்தால், அவா் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்ற சந்தேகம் உள்ளது’ என்று முறையிட்டாா்.
இரு தரப்பு வாதங்களை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ஜாமீன் மனு மீதான தனது தீா்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு (அக். 15) ஒத்திவைத்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...