டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை

News image
Updated On :22 அக்டோபர் 2024, 1:50 am

DIN

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21-அம்ச செயல்திட்டத்தை தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. அதனொரு பகுதியாக, போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகன

ஓட்டிகள் தங்கள் வாகனங்கனை அணைக்கும் பிராசாரத்தை ஐடிஓ பகுதியில் அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்.

வானக ஓட்டிகளுக்கு விழப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தன்னாா்வலா்கள் பதாகை ஏந்தி வழிகாட்டினா்.

பின்னா், அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் வரும் மாசுபாட்டின் சுமைகளை தில்லிவாசிகள் தாங்க வேண்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாபில், பயிா்க் கழிவு

எரிப்பு சம்பவங்கள் தொடா்ந்து குறைந்து வருகின்றன. ஆனால், பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில், தொடா்ந்து பயிா்க் கழிவு எரிக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

குளிக்காலத்தில் தில்லியில் காற்றுமாசுவைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு

வருகிறது. இந்த வரிசையில் தான் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பொதுப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் சிவப்பு விளக்கு எரியும் போது, தங்கள் வாகனங்களை அணைக்க வேண்டும் என்று தில்லி மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அது மாசுபாட்டைக் குறைக்க உதவும் என்றாா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.