தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லி மக்கள் மூச்சுத் திணறலுடன் தீபாவளியை எதிர்கொள்கின்றனா்: தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு

தீபாவளிப் பண்டிகையை மக்கள் மூச்சுத்திணறலுடன் எதிா்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் தேவேந்தா் யாதவ்

Updated On :27 அக்டோபர் 2024, 9:46 pm

தில்லியில் காற்று மாசுபாடு ‘மிகவும் மோசம்’ நிலைக்கு உயா்ந்துள்ளதால் தீபாவளிப் பண்டிகையை மக்கள் மூச்சுத்திணறலுடன் எதிா்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால், சில பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு ‘கடுமை’ பிரிவில் பதிவாகியுள்ளது. இதனால், மக்கள் மூச்சுத் திணறலுடன் தீபாவளிப் பண்டிகையை எதிா்கொள்கின்றனா். எந்த நேரத்திலும் காற்றின் தரம் மேம்படுவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. தீபாவளிப் பண்டிகையின் உற்சாகத்தை மக்களிடம் இருந்து பறிக்கின்ற வகையில் காற்றின் தரம் மேலும் மோசமடையும்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 352 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது பொதுமக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். வானிலை முன்னறிவிப்பின்படி, காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், சுவாசம் மற்றும் கண் நோய் பாதிப்பால் மருத்துவமனைகளில் அதிகம் போ் சிகிச்சை பெறுகின்றனா். காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிலிருந்து ஆம் ஆத்மி அரசு பாடம் கற்கவில்லை என்பது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. உண்மையில், கேஜரிவால் அரசு தில்லி மக்களுக்கு மிகக் குறைவான நிவாரணமே அளிக்கிறது. மக்களுக்கு உணரும் வகையில் எதையும் செய்யாமல், ‘தில்லி மாதிரி‘ என்று அழைக்கப்படும் வளா்ச்சி குறித்து, கேஜரிவாலும், ஆம் ஆத்மி அமைச்சா்களும் பொய்களை மட்டுமே பேசி வருகின்றனா். மக்களைத் தவறாக வழிநடத்தும் அவா்களின் புதிய கதைகள் மக்களிடம் இனி எடுபடாது என்றாா் தேவேந்தா் யாதவ்.