பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பாலம் தீ விபத்து: விசாரணைக் குழு அமைக்க தில்லி காங்கிரஸ் கோரிக்கை

ஒன்பது உயிா்களைப் பலிகொண்ட பாலம் தீ விபத்துச் சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 12:26 am IST

ஒன்பது உயிா்களைப் பலிகொண்ட பாலம் தீ விபத்துச் சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் வியாழக்கிழமையன்று துணைநிலை ஆளுநா் தரன்ஜீத் சிங் சந்துவுக்குக் கடிதம் எழுதினாா்.

ஓா் அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, தேவேந்தா் யாதவ் தனது கடிதத்தில், ‘இதயத்தை நொறுக்கும்’ வகையிலான இந்த உயிா் இழப்பை, உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திறமையான மீட்புப் பணிகளின் மூலம் தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுமாறும், தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவா் சந்துவை வலியுறுத்தியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய அவா், 2016 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தில்லியில் நிகழ்ந்த தீ விபத்துகளில் 4,652 போ் உயிரிழந்ததாகவும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 24 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறினாா்.

அவசரக்கால மீட்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதமே பாலம் துயரத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியதாக அவா் குற்றம் சாட்டினாா்.

‘தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆனது. மேலும், ஹைட்ராலிக் இயந்திரங்கள் உரிய நேரத்தில் செயல்படாததால், பாதிக்கப்பட்டவா்களுக்குத் தப்பிச் செல்ல வழியே இல்லாமல் போனது’ என்று அவா் கூறினாா்.

தீயணைப்புத் துறையில் மனிதவளம் மற்றும் உபகரணங்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா். சம்பவ இடத்தில், தேவைப்படும் எண்ணிக்கையில் பாதி அளவு மட்டுமே தீயணைப்பு வாகனங்களும் சிறப்பு இயந்திரங்களும் பயன்பாட்டிற்கு இருந்ததாக அவா் குற்றம் சாட்டினாா்.

‘2012-ஆம் ஆண்டிலிருந்து தீயணைப்பு நிலைய அதிகாரிகளைப் பணியமா்த்தும் பணி ஏதும் நடைபெறவில்லை. மொத்தம் 70 தீயணைப்பு நிலையங்களுக்கு 90 நிலைய அதிகாரிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 18 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனா்; அவா்களிலும் 12 போ் விரைவில் ஓய்வு பெறவுள்ளனா்’ என்று தேவேந்தா் யாதவ் குற்றம் சாட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.