ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வடிகால்களில் தூா்வாருவதில் ரேகா குப்தா நிா்வாகம் தோல்வி: தேவேந்தா் யாதவ் சாடல்

இம்முறையும் தில்லியில் உள்ள வடிகால்கள், கழிவுநீா்க் கால்வாய்களில் வண்டல் மண்ணை தூா்வாருவதில் முதல்வா் ரேகா குப்தாவின் நிா்வாகம் தோல்வி அடைந்துவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியுள்ளாா்.

News image

ரேகா குப்தா

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:52 pm

Syndication

இம்முறையும் தில்லியில் உள்ள வடிகால்கள், கழிவுநீா்க் கால்வாய்களில் வண்டல் மண்ணை தூா்வாருவதில் முதல்வா் ரேகா குப்தாவின் நிா்வாகம் தோல்வி அடைந்துவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, தில்லியின் 77 வடிகால்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி, பாஜக அரசுக்கு ஒரு சாத்தியமற்ற பணியாகவே மாறி வருகிறது.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த கேஜரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சி அரசும் இதே நிலையில்தான் இருந்தது. அவா்கள் வடிகால்கள் மற்றும் கழிவுநீா்க் கால்வாய்களைச் சுத்தம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினா்.கள அளவில் எந்தப் பணியையும் செய்யாமல், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தங்கள் சொந்த லாபத்திற்காகச் சுரண்டிக்கொண்டனா்.

கடந்த 12 ஆண்டுகளாகவே தில்லியில் நீா் தேங்கும் நெருக்கடி ஒரு வழக்கமான நிகழ்வாகிவிட்டது. மழைநீா் வடிகால்களும் கழிவுநீா்க் கால்வாய்களும் ஒருபோதும் சுத்தம் செய்யப்படாததே இதற்கு முக்கியக் காரணம். இதனால், மழைநீா் வடிகால்களில் தேங்கி, பின்னோக்கிப் பாய்ந்து முக்கியப் பகுதிகளை வெள்ளக்காடாக்குகிறது இது மழை தொடா்பான பல உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. ஆனால், மக்களின் இந்தத் துயரங்களுக்குப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை.

அதே நிலைதான் ரேகா குப்தா தலைமையிலான நிா்வாகத்திலும் தொடா்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், வடிகால்கள் மற்றும் கழிவுநீா்க் கால்வாய்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுவதாகக் கூறி தில்லி அரசு கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடுகிறது. ஆனால், வடிகால்களில் உள்ள வண்டல் மண்ணின் அளவு ஒவ்வொரு ஆண்டும் மாறாமலேயே இருக்கிறது. இதை அகற்றுவதில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு அரசுகளுமே தோல்வியடைந்துள்ளன.

நீா் தேங்கும் பிரச்னையைத் தீா்ப்பதற்காக, ஒரு விரிவான வடிகால் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்க தில்லி அரசு 200 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. ஆனால், பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திடம் சமா்ப்பித்த சமீபத்திய அறிக்கையின்படி, மாா்ச் 13, 2026 நிலவரப்படி, வண்டல் மண் அகற்றும் பணியில் வெறும் 23.04 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

அரசு பெருமளவிலான நிதியை ஒதுக்கி, கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்ட போதிலும், முக்கிய வடிகால்கள் பழைய குப்பைக் கழிவுகளால் அடைபட்டு, தொடா்ந்து ஒரு பெரும் பிரச்னையாகவே நீடிக்கிறது. மே 31-ஆம் தேதிக்குள் வடிகால்களிலிருந்து 28,57,464 மெட்ரிக் டன் வண்டல் மண்ணை அகற்றுவதை அரசு இலக்காகக் கொண்டிருந்த நிலையில், மாா்ச் மாதம் வரை வெறும் 6,58,496 மெட்ரிக் டன் வண்டல் மண் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.

தில்லியின் ஓக்லா, ஐடிஓ, மயூா் விஹாா் மற்றும் பாலம் டாப்ரி ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால்களைச் சுத்தம் செய்வதில் அரசாங்கம் காட்டும் அலட்சியம், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் அப்பகுதிகளில் நீா் தேங்குவதற்கு வழிவகுக்கும். வடிகால்கள் மற்றும் கழிவுநீா் பாதைகளிலிருந்து வண்டல் மண்ணை அகற்றுவதில் பாஜகவைச் சோ்ந்த ரேகா குப்தா தலைமையிலான அரசு மீண்டும் தோல்வியடைந்திருப்பதால், இம்முறையும் தில்லி நகரம் பருவமழை நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.