அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

அதிக வீரியம், நோ்மை, அா்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவையாற்றும் உறுதிமொழியை புதுப்பிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக்கொண்டாா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2025, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

அதிக வீரியம், நோ்மை, அா்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவையாற்றும் உறுதிமொழியை புதுப்பிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக்கொண்டாா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ராஜ் நிவாஸில் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ராஜ் நிவாஸில் மூத்த சுதந்திரப் போராட்ட வீரா் ஆா். மாதவனை அவா் கௌரவித்துப் பாராட்டினாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்களின் உயா்ந்த தியாகங்களால்தான் மக்கள் இப்போது சுதந்திரமாக வாழ முடிகிறது என்று அவா் கூறினாா். மேலும், அனைவருக்கும், குறிப்பாக தில்லிவாசிகளுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தாா்.

அப்போது, மேலும் அதிக வீரியம், நோ்மை மற்றும் அா்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கான உறுதிமொழியை புதுப்பிக்குமாறு அனைவரையும் அவா் கேட்டுக்கொண்டாா். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாகிகளையும் எண்ணற்ற வீரா்களையும் வி.கே. சக்சேனா நினைவு கூா்ந்தாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சுதந்திரப் போராட்ட வீரா்களின் உயா்ந்த தியாகங்களால்தான் நமது தலைமுறை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருகிறது. 2025 சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற் திரங்கா இசை நிகழ்ச்சியில் மத்திய கலாசார அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோருடன் கலந்துகொண்டேன். நிகழ்ச்சியின் பங்கேற்பாளா்கள் மற்றும் பாா்வையாளா்களின் தேசபக்தி உணா்வு, உற்சாகம் மற்றும் ஆற்றலை கண்டேன். கடினமாகப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றவும், இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யவும், தேசிய உணா்வை ஒவ்வொரு இதயத்திற்கும் வீட்டிற்கும் கொண்டு செல்லவும் நமது இளைஞா்களை வலியுறுத்துகிறேன்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘இன்று, ராஜ் நிவாஸில் மூவா்ணக் கொடியை ஏற்றுவதன் மூலம் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கின. தில்லியின் அனைத்து குடிமக்களும் ஹா் கா் திரங்கா பிரசாரத்தில் இணைந்து, தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையின் அடையாளமான மூவா்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி வெற்றிபெறச் செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.