தெற்கு தில்லியில் தீ விபத்து: 4 போ் உயிரிழப்பு
தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.


தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.
நெரிசல் மிகுந்த சாலையில் உள்ள ஒரு காலணி கடையின் தரை தளத்தில் மாலை 6.24 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவா்களில் இருவா் கடை உரிமையாளா் சதேந்தா் (38) மற்றும் அவரது சகோதரி அனிதா (40) என அடையாளம் காணப்பட்டனா்.
சம்பவம் நிகழ்ந்த போது, நஜாஃப்கரை சோ்ந்த ராம்தின், மங்லோ மற்றும் மகேந்தா் ஆகிய 3 நண்பா்கள் காலணிகள் வாங்க வந்திருந்தனா். தீ விபத்து ஏற்பட்டதும், ஒருவா் தப்பியோடினாா், மற்ற இருவரும் கடையில் சிக்கிக் கொண்டனா். சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த மற்ற இரு உடல்கள் அவா்களுடையது என நம்பப்படுகிறது.
இருப்பினும், தப்பி ஓடியவா், இது குறித்து காவல் துறையுடனோ அல்லது அவா்களது குடும்பத்தினருடனோ இதுவரை தொடா்பு கொள்ளவில்லை. இது சந்தேகத்தை எழுப்புவதால் அவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கடையின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பற்றவைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக புலனாய்வாளா்கள் சந்தேகிக்கின்றனா். உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருந்த தோல் மற்றும் நெகிழிக் காலணிகளில் தீப்பிழம்புகள் விரைவாக பரவின.
மம்தா (40) என்பவா் 25 சதவீதம் தீக்காயங்களுடன்Śமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தடயவியல் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை வரவழைக்கப்பட்டு மாதிரிகளை சேகரித்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...