கஷ்மீரி கேட் அருகே சுற்றுலாப் பயணிகள் பேருந்து தீ விபத்து

கஷ்மீரி கேட் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

கஷ்மீரி கேட் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த தனியாா் சுற்றுலா பேருந்து, ஹரியாணாவில் உள்ள கா்னல் நோக்கி சென்று கொண்டிருந்ததது. அந்தப் பேருந்தில் 15 பயணிகள் இருந்தனா். காலை 6.50 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, காலை 7.35 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com