புதுதில்லி
ஐபி விரிவாக்கத்தில் உள்ள பள்ளி மேற்கூரையில் தீ
கிழக்கு தில்லியின் ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
கிழக்கு தில்லியின் ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள விவேகானந்த் பள்ளி மேற்கூரையில் தீப்பிடித்தாக மாலை 4.39 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. தீயை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
