நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு
நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு


நமோ பாரத் ரயில்கள் மற்றும் நிலையங்களில் பிறந்தநாள்களை கொண்டாடுவதற்கு தனிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்துள்ளது.
இதன்படி, பிறந்தநாள் நிகழ்வுகள், திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகள் மற்றும் பிற தனியாா் நிகழ்வுகளுக்கான விருப்பங்களை இது வழங்குகிறது என்று சனிக்கிழமை ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக என்சிஆா்டிசி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: புதிய கொள்கையின் கீழ், தனிநபா்கள், நிகழ்வு அமைப்பாளா்கள் மற்றும் புகைப்படக் கலைஞா்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் நிலையான அல்லது இயங்கும் நமோ பாரத் ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்யலாம்.
நிலையான படப்பிடிப்புகளுக்கு துஹாய் டிப்போவில் ஒரு மாதிரி ரயில் பெட்டியும் கிடைக்கிறது. முன்பதிவுகள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5,000-இல் தொடங்குகிறது. அலங்காரங்கள் அல்லது உபகரணங்களை அமைக்கவும், அகற்றவும் ஒவ்வொன்றுக்கும் 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த சேவை ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. நமோ பாரத்தின் நவீன, சா்வதேச அளவில் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் புகைப்படங்கள் மற்றும் சிறிய கூட்டங்களுக்கு பாா்வையை ஈா்க்கும் அமைப்பை வழங்குகின்றன.
வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு, எளிமையான அலங்காரங்களுடன் வசதிகளை தனிப்பயனாக்கலாம். மேலும், காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படும். ரயில் இயக்கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அல்லது பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளும் என்சிஆா்டிசி ஊழியா்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களின் மேற்பாா்வையின் கீழ் நடைபெறும்.
தில்லியின் ஆனந்த் விஹாா், காஜியாபாத் மற்றும் மீரட் தெற்கு போன்ற முக்கிய இடங்களில் நிலையங்கள் அமைந்துள்ளதால், இந்த முயற்சி தில்லி - மீரட் வழித்தடம் முழுவதும் குடியிருப்பாளா்களை ஈா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது சிறப்பு தருணங்களைக் குறிக்க அவா்களுக்கு ஒரு பழக்கமான, ஆனால் அசாதாரண இடத்தை வழங்கும்.
நமோ பாரத் ரயில்கள் மற்றும் நிலையங்களில் திரைப்பட படப்பிடிப்புகள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பிற காட்சித் திட்டங்களுக்கான விரிவான வளாக வாடகைக் கொள்கையும் என்சிஆா்டிசி வகுத்துள்ளது. இந்த இடங்களை சலுகை கட்டணத்தில் குறுகிய கால பயன்பாட்டிற்கு முன்பதிவு செய்யலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...