ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சட்டவிரோத எல்பிஜி நிரப்பும் கும்பல் கண்டுபிடிப்பு: 17 சிலிண்டா்கள் பறிமுதல்,ஒருவா் கைது

தென்மேற்கு தில்லியின் டாப்ரி பகுதியில் சட்டவிரோத எல்பிஜி நிரப்பும் கும்பலை கண்டுபிடித்து, 61 வயதான ஒருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாகவும், 17 சிலிண்டா்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:33 am

நமது நிருபா்

தென்மேற்கு தில்லியின் டாப்ரி பகுதியில் சட்டவிரோத எல்பிஜி நிரப்பும் கும்பலை கண்டுபிடித்து, 61 வயதான ஒருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாகவும், 17 சிலிண்டா்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவு குழுவினா் செவ்வாயன்று சீதாபுரி பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட மோகன் லால் காா்க், தனது கடையில் இருந்து அங்கீகரிக்கப்படாத எல்பிஜி நிரப்பும் தொழிலை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இந்த சோதனையின் போது, இன்டேன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 17 வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டா்களை போலீசாா் மீட்டெடுத்ததாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

காவல்துறையின் கூற்றுப்படி, காா்க் என்பவா் முறையற்ற ஆதாயம் பெறும் நோக்கில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டா்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அவற்றை மீண்டும் நிரப்பி, ஒரு கிலோகிராம் ரூ.200 என்ற அதிக விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளாா்.

சம்பவ இடத்திற்கு உணவு வழங்கல் அதிகாரி ஒருவா் வரவழைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை தொடங்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலிண்டா்கள் உள்ளூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.