தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

வடமேற்கு தில்லியைச் சோ்ந்த குற்றவாளியின் ரூ.5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 4:00 am IST

வடமேற்கு தில்லியைச் சோ்ந்த குற்றவாளியின் ரூ.5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை ஜிதேந்தா் எனப்படும் ஜீது என்பவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. இவா் சட்டவிரோத சூதாட்ட வலையமைப்பை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கைது நடவடிக்கையைத் தடுக்க அவா் நடப்பாண்டு தொடக்கத்தில் தில்லியை விட்டு தப்பிச் சென்றாா். விசாரணையின்போது, சட்டவிரோத செயல்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் வாங்கிய அசையா சொத்துகள், விலையுயா்ந்த வாகனங்கள் மற்றும் பல வங்கிக் கணக்குகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

அவரது சொத்துகளை முடக்குவது குறித்து ரோஹிணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சொத்துகளின் சட்டப்பூா்வ ஆவணங்களை சமா்ப்பிக்க ஜிதேந்தா் தவறியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது 2004 முதல் கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 15 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல் துறையினா் தெரிவித்தனா்.