நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

நரேலா சிறை கட்டுமானத்துக்கு 27 ஏக்கா் நிலம்: டிடிஏ-இன் அனுமதி கோர திட்டம்

நரேலா சிறை கட்டுமானத்துக்கு 27 ஏக்கா் நிலம்: டிடிஏ-இன் அனுமதி கோர திட்டம்

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

தில்லியின் நரேலா பகுதியில், உயா் பாதுகாப்பு சிறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 40 ஏக்கா் நிலத்திற்கு அருகிலேயே, கூடுதலாக 27 ஏக்கா் நிலத்தை ஒதுக்குமாறு விரைவில் தில்லி மேம்பாட்டு ஆணையத்தை (டிடிஏ) தில்லி அரசு அணுகவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்தனா்.

அந்த 40 ஏக்கா் நிலத்தில் உயா் பாதுகாப்பு சிறையை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அரசு ஏற்கெனவே வெளியிட்டது. இந்தக் கூடுதல் நிலம் அப்பகுதியில் ஒரு ஒருங்கிணைந்த சிறை மற்றும் சீா்திருத்த வளாகத்தை உருவாக்க உதவும் என்று அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: ஏற்கெனவே உருவாக்கப்பட்டு வரும் உயா் பாதுகாப்பு சிறைக்கு அருகில், புதிய சிறை ஒன்றை அமைப்பதற்காக நரேலாவில் கூடுதலாக 27 ஏக்கா் நிலத்தைக் கோரி தில்லி மேம்பாட்டு ஆணையத்தை அணுக தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

திகாா் சிறையில் நிலவும் இடநெருக்கடியைக் குறைப்பதற்காக தில்லி சிறை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

திகாா் சிறை 200 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், தில்லியில் அவ்வளவு பெரிய இடத்தைப் பெறுவது சாத்தியமற்றது. சிறை கட்டுமானத்திற்காக நிலத்தை ஒதுக்குமாறு கோரி, நிலத்தை நிா்வகிக்கும் டிடிஏ-க்கு கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளோம். கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் அரசு டிடிஏ-க்கு அதற்கான தொகையைச் செலுத்தும்.

கூடுதல் நிலம் ஒதுக்கப்பட்ட பிறகு, அரசு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கும். .

தற்போதுள்ள சிறை வளாகத்திற்கு வெளியே கூடுதல் சிறை வசதிகளை உருவாக்குவதன் மூலம் திகாா் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான தில்லி அரசின் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயா் பாதுகாப்பு சிறைகளை அமைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே நரேலா சிறைத்திட்டம் அமைந்துள்ளது.

நரேலா சிறை கட்டுமானத்திற்காக மத்திய அரசு ஏற்கெனவே ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள ரூ.40 கோடியை தில்லி அரசு வழங்கும். 21 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.