விமான நிலைய ஊழியா் என்று கூறிக்கொண்டு, பெண்ணின் மகனுக்கு விமானப் பணிக்குழு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த 32 வயது நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மேலும் கூறியதாவது: ராஜீவ் குமாா், ஆக.6-ஆம் தேதி மது விஹாா் பகுதியில் கைது செய்யப்பட்டாா்; அங்கு அவா் சில்லறை விற்பனைக் கடையில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தாா். ஜூலை 2024-இல் சமூக ஊடகங்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவருக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டது.
பின்னா், அந்த வேலைக்காகப் பல்வேறு காரணங்களைக் கூறி அவா் பணம் கேட்டாா். அந்தப் பெண் செப்டம்பா் முதல் டிசம்பா் 2024 வரையிலான காலகட்டத்தில் 16 பரிவா்த்தனைகள் மூலம் அவருக்கு மொத்தம் ரூ.3.03 லட்சம் அனுப்பினாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்த நபா் வேலையை ஏற்பாடு செய்து தரவில்லை; அத்துடன் அந்தப் பெண்ணுடனான தொடா்பையும் துண்டித்துக்கொண்டாா்.
இது தொடா்பாகப் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பணப் பரிவா்த்தனை விவரங்களின் அடிப்படையில் காவல்துறையினா் அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்தனா். விசாரணையின்போது, அந்த நபா் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டாா். அவரிடமிருந்து அலைபேசி மற்றும் வங்கி தொடா்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் முதலீடு: முதியவரிடம் ரூ. 1.83 லட்சம் மோசடி

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.5 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஆன்லைன் லாட்டரி: பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி

விமான நிலைய அதிகாரி எனக்கூறி ரூ.55.70 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


