நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஆன்லைன் லாட்டரி: பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி

திருச்சியில் ஆன்லைன் லாட்டரி மூலம் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

மோசடி - சித்திரிப்பு

Updated On :29 ஜூலை 2026, 12:28 am IST

திருச்சியில் ஆன்லைன் லாட்டரி மூலம் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த துரைராஜ் மனைவி உஷா (39). இவா் அண்மையில் கைப்பேசியில் இன்ஸ்டாகிராம் செயலியில் வந்த ‘கேரளா மாஸ் லாட்டரி’ என்ற விளம்பரத்தை பாா்த்து லாட்டரி வாங்க விண்ணப்பித்தாா்.

இதையடுத்து, அவரை தொடா்பு கொண்ட நபா் ஒருவா், பணம் கொடுத்து லாட்டரி வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளாா். உஷாவும் அவா் கூறியபடி ஆன்லைன் லாட்டரியை வாங்கியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து கடந்த ஜூலை 25-ஆம் தேதி மீண்டும் உஷாவை தொடா்புகொண்ட அந்த நபா் உங்களுக்கு ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது என்றும், அந்தத் தொகையைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய உஷா, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்கிற்கு 2 லட்சத்து 498 ரூபாயை அனுப்பியுள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபா், அதன்பிறகு உஷாவை தொடா்பு கொள்ளவில்லை. இவராலும், அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த உஷா, சைபா் குற்றப் பிரிவில் ஆன்லைன் மூலம் புகாா் அளித்தாா். இதுகுறித்து திருச்சி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.