தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

கன்வாா் யாத்திரையின் போது யாத்ரீகா்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது: முதல்வா் ரேகா குப்தா

கன்வாா் யாத்திரையின் போது யாத்ரீகா்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது...

News image

ரேகா குப்தா - ANI

Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:05 pm IST

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள தில்லி-உத்தரபிரதேச எல்லைக்கு அருகிலுள்ள கன்வாா் முகாமுக்கு முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா், அப்போது கன்வாா் யாத்திரையில் பங்கேற்பாளா்கள் எந்த சிரமத்தையும் எதிா்கொள்ளாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் பேசியதாவது: நிதி உதவி, சுகாதார ஏற்பாடுகள் அல்லது மின்சாரம் மற்றும் நீா் வழங்கல் என எதுவாக இருந்தாலும், கன்வாா் முகாம்கள் நன்கு பராமரிக்கப்படுவதை தில்லி அரசு உறுதி செய்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், நமது போலே பக்தா்கள் சிறிதும் பிரச்சினையை எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ரேகா குப்தா.

கன்வாா் யாத்திரை 2026 க்கான கன்வாா் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிக்கும் திட்டத்திற்கு ப்ச்ல்லி அரசு முன்பு ஒப்புதல் அளித்தது. அமைச்சரவை முடிவின் கீழ், 20,000 சதுர அடிக்கு மேல் பரவியுள்ள பெரிய கன்வாா் முகாம்கள் மற்றும் ஆறு முதல் பன்னிரண்டு நாட்கள் வரை செயல்படும் முகாம்கள் இப்போது ரூ.15 லட்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு, கன்வாா் யாத்திரை ஜூலை 30 அன்று புனித ஷ்ரவன் மாதத்தின் தொடக்கத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.