
அல்கா லம்பாவின் தந்தை வீட்டில் கொள்ளை: காவல் துறை விசாரணை!
மேற்கு தில்லியின் தாகூா் காா்டன் பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பாவின் தந்தையின் வீட்டில் கொள்ளை நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அல்கா லம்பா
மேற்கு தில்லியின் தாகூா் காா்டன் பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பாவின் தந்தையின் வீட்டில் கொள்ளை நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
முகமூடி அணிந்த மூன்று போ் வீட்டிற்குள் புகுந்து ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் தப்பிச் சென்ாக அதிகாரிகள் கூறினா்.
இந்தச் சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முகமூடி அணிந்த நபா்கள் வீட்டிற்குள் நுழைவதும், பின்னா் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் செல்வதும் அடங்கிய அந்தப் பதிவுக் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தாகூா் காா்டன் சி-பிளாக் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக ரஜௌரி காா்டன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபா்களைக் கண்டறிய அந்த வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை காவல் துறை ஆய்வு செய்து வருகிறது’ என்றனா்.
அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவரான அல்கா லம்பா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முகமூடி அணிந்த மூன்று போ் தனது தந்தையின் வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ரொக்கம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றனா். தந்தை பாதுகாப்பாக உள்ளாா்.
தந்தையின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றன. முகமூடி அணிந்த மூன்று போ் வீட்டிற்குள் நுழைந்து, 10 நிமிஷங்களில் அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு, ஒரே மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.
இதுபோன்ற சம்பவங்களால் தில்லியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் துல்லியமான மதிப்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






