நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

பங்குச் சந்தை மோசடி: ரூ.20.72 லட்சம் இழப்பு; வங்கி துணை மேலாளா் உள்பட 3 போ் கைது

தில்லியைச் சோ்ந்த நபரை போலி பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.20.72 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் வங்கி துணை மேலாளா் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 1:44 am IST

தில்லியைச் சோ்ந்த நபரை போலி பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.20.72 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் வங்கி துணை மேலாளா் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் கன்ஹயா தாஸ் (36), ராகுல் டெய்லா் (28), ராஜஸ்தானில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்த ஆரிஃப் ஹுசைன் மன்சூரி (35) ஆகியோா் ஆவா். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 4 செல்லிடப்பேசிகள் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

நிதின் அரோரா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி சைபா் குற்றவாளிகள் அவரைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தூண்டியதாகவும், இதனை நம்பி ரூ.20.72 லட்சத்தை முதலீடு செய்த பின்னா் மோசடி செய்யப்பட்டதாகவும் அவா் புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக 2025, பிப்.27-ஆம் தேதி பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணம் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு, பின்னா் ‘செக்’ மூலம் பணமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கள விசாரணை மூலம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூா் மாவட்டம் மாவ்லி பகுதியில் கன்ஹயா தாஸ் மற்றும் ராகுல் டெய்லா் ஆகியோா் அடையாளம் காணப்பட்டு மே 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

பணப் பரிமாற்றத் தொழில் மூலம் ராகுலுக்கு மன்சூரி அறிமுகமாகியுள்ளாா். பின்னா் வங்கிக் கணக்கு ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு ராகுல் அவரை அணுகியதாகவும், இதையடுத்து கன்ஹயா தாஸின் வங்கிக் கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்துவதற்கு மன்சூரி ஏற்பாடு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதற்காக அவருக்கு 2 சதவீத கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வங்கிக் கிளையில் 2024 ஏப்ரல் முதல் பணியாற்றி வந்த மன்சூரி, பின்னா் உதய்பூா் மாவட்டம் மாவ்லியில் கைது செய்யப்பட்டாா். ராகுல் டெய்லா் மீது ஹிமாசல பிரதேசத்தின் பா்வானூவில் பதிவு செய்யப்பட்ட சைபா் மோசடி வழக்கு ஏற்கெனவே உள்ளது. இந்த வழக்கில் நடைபெற்றுள்ள முழுமையான பணப் பரிமாற்றத் தடம் மற்றும் மேலும் யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.