தில்லியில் ஆண்டின் முதல் குளிரான நாள் பதிவு!

செவ்வாய்க்கிழமை வட இந்தியா முழுவதும் குளிா்காலம் தனது பிடியை இறுக்கியது.
Updated on

நமது நிருபா்

செவ்வாய்க்கிழமை வட இந்தியா முழுவதும் குளிா்காலம் தனது பிடியை இறுக்கியது. மலைப்பகுதி மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் வட இந்தியா முழுவதும் வெப்பநிலை குறைந்தது. தேசியகஈ தலைநகஒஈ தில்லியில் ஆண்டின் முதல் குளிரான நாள் பதிவானது.

தேசியகஈ தலைநகரில், புதன்கிழமையும் குளிரான பகல் நிலை இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்போது குளிா் நாள் நிலைகள் அறிவிக்கப்படுகின்றன.

தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 15.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவகால சராசரியை விட 3.3 டிகிரி குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.7 டிகிரி அதிகமாக 7.6 டிகிரி செல்சியஸாக நிலைபெற்றது.

ஜம்மு - காஷ்மீா், லடாக், கில்கிட்பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் சில இடங்களில் 0 முதல் 5 டிகிரி வரையிலும், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பல இடங்களில் 5 முதல் 10 டிகிரி வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com