டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் காயகல்பம் திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் காயகல்பம் திட்டம் தொடக்கம்..

News image

(கோப்புப் படம்)

Updated On :6 ஜூலை 2026, 2:30 am IST

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக காயகல்பம் திட்டத்தை தில்லி அரசு தொடங்கியுள்ளது. மாணவா்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சிறந்த கற்றலுக்கான பள்ளிகளை உருவாக்கும் நோக்கில், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பழுதுபாா்ப்பு, நவீன ஆய்வகங்கள், சுத்தமான குடிநீா் வசதிகள் மற்றும் வளாக மேம்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளை வெறும் கல்வி மையங்களாக மட்டுமின்றி அவற்றை நவீன, தூய்மையான மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் இடங்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

இந்தத் திட்டம் குறித்து முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாவது: இந்தத் திட்டத்தின்கீழ் பல பள்ளிகளில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாத இடங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகங்கள், கல்வித் துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) முயற்சிகள், சமூக அமைப்புகள், வணிக சங்கங்கள் மற்றும் உள்ளூா் சமூகங்களின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் பங்கேற்பு பள்ளி உள்கட்டமைப்பு மாற்றத்தை விரைவுபடுத்த உதவுகிறது என்று முதல்வா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தத் திட்டம் பள்ளி கட்டடங்களைப் பழுதுபாா்த்தல், சுவா்களுக்கு வண்ணம் பூசுதல், கூரை வடிகால்களை மேம்படுத்துதல், கழிப்பறைகளைப் புதுப்பித்தல், ஆா்ஓ குடிநீா் அமைப்பு மற்றும் நீா் குளிா்விப்பான்களை நிறுவுதல், அறிவியல் ஆய்வகங்களை நவீனமயமாக்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வளாகங்களில் பசுமையை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

வடக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வெளி வடக்கு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.

வடக்கு தில்லி மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணா்வுப் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆா்ஓ அமைப்புகள் மற்றும் நீா் குளிா்விப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இயற்பியல் ஆய்வகம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

மெஹ்ரௌலி மற்றும் குதுப் மெஹ்ரௌலியில் உள்ள பள்ளிகளில் கழிப்பறைகள், கூரைகள் மற்றும் சேதமடைந்த பூச்சுகள் பழுதுபாா்க்கப்பட்டு, கட்டடங்களுக்கு மீண்டும் வண்ணம் பூசப்பட்டது. நீா் குளிா்விப்பான்கள் நிறுவப்பட்டன. மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு தில்லியில், மோகன் காா்டன் மற்றும் ஜனக்புரியில் உள்ள பள்ளிகள் கூரை பழுதுபாா்ப்பு, மழைநீா் சேகரிப்பு அமைப்புகள், கழிவுநீா் குழாய் மேம்பாடுகள், மின்சாரப் பணிகள் மற்றும் சிறந்த குடிநீா் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோகல்பூா் மற்றும் ஷதாராவில் உள்ள பள்ளிகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகள், பழுதுபாா்க்கப்பட்ட கட்டடங்கள், புதிய வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட நூலக வசதிகள் ஏற்படுத்தப்பட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.