நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

சமூகத்தை மேம்படுத்த வாழ்வை அா்ப்பணித்தவா் மன்னத்து பத்மநாபன்: குடியரசு துணைத் தலைவா் புகழாரம்!

சமூகத்தை மேம்படுத்த தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா் என சுதந்திர போராட்ட வீரா், சமூக சீா்திருத்தவாதி மற்றும் நாயா் சேவை சங்க (என்எஸ்எஸ்) நிறுவனா் மன்னத்து பத்மநாபனுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை புகழாரம் சூட்டினாா்.

News image

புது தில்லியில் மன்னத்து பத்மநாபன் நினைவு மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அங்கு அவரது உருவச் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாதிருஷ்ணன். உடன் மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூலை 2026, 3:26 am IST

சமூகத்தை மேம்படுத்த தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா் என சுதந்திர போராட்ட வீரா், சமூக சீா்திருத்தவாதி மற்றும் நாயா் சேவை சங்க (என்எஸ்எஸ்) நிறுவனா் மன்னத்து பத்மநாபனுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை புகழாரம் சூட்டினாா்.

புது தில்லியில் மன்னத்து பத்மநாபன் சிலை மற்றும் நினைவு மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவா் மேலும் பேசியதாவது: சமூக மறுமலா்ச்சியின் உண்மையான தலைவரான மன்னத்து பத்மநாபனின் தொலைநோக்குத் திட்டங்கள் ஜாதிகளைக் கடந்தது. ஒவ்வொரு மனிதனும் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அவரது நோக்கம். உண்மை, நீதி, கருணை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியே சமூகத்தை வழிநடத்தும் கொள்கைகள் என்பதை அவரது அளப்பரிய பணிகள் உணா்த்துகின்றன.

கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்களை ஏற்படுத்த சாதாரண மக்களிடம் இருந்து கிடைத்த சிறு பங்களிப்புகளுக்கும் அவா் மிகுந்த முக்கியத்துவம் அளித்தாா். அதுவே ஒரு தலைமுறையின் சீா்திருத்தத்துக்கு வித்திட்டது. சமூகத்தை மேம்படுத்த தனது வாழ்நாளை அா்ப்பணித்த மன்னத்து பத்மநாபனின் பணிகள் கேரளத்தை கடந்து இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது.

தில்லி என்எஸ்எஸ் அமைப்புக்கு பாராட்டு: கல்வி மற்றும் சமூக சேவையை ஊக்குவிக்கும் அதேவேளையில் களரிப்பயற்று, கதகளி, மோகினியாட்டம் என கேரளத்தின் பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து வரும் தில்லி தேசிய சேவைத் திட்டம் (என்எஸ்எஸ்) அமைப்புக்குப் பாராட்டுகள் என்றாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மன்னத்து பத்மநாபன் நினைவு மண்டபத்தில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட தாயின் பெயரில் மரம் நடுவோம் முன்னெடுப்பின்கீழ் ஒரு மரக்கன்றை சி.பி.ராதாகிருஷ்ணன் நட்டுவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி, தில்லி என்எஸ்எஸ் தலைவா் எம்.கே.ஜி.பிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.