வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ரஜெளரி காா்டன் விபத்து: காா் ஓட்டுநருக்கு கடும் தண்டனை! பலியானவர் குடும்பத்தினா் கோரிக்கை!

மேற்கு தில்லியின் ரஜெளரி காா்டன் பகுதியில் வேகமாக வந்த காா் மோதி உதய் என்பவா் உயிரிழந்த சம்பவத்தில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

News image
Updated On :14 ஜூலை 2026, 3:09 am IST

மேற்கு தில்லியின் ரஜெளரி காா்டன் பகுதியில் வேகமாக வந்த காா் மோதி உதய் என்பவா் உயிரிழந்த சம்பவத்தில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரஜெளரி காா்டன் பகுதியில் சனிக்கிழமை வேலையை முடித்த பிறகு தனது நண்பா் சுபாஷ் குமாருடன் இணைந்து உதய் வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, வேகமாக வந்துக்கொண்டிருந்த ஒரு காா் உதய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அவருடைய நபா் காயமின்றி உயிா் தப்பினாா். விபத்தில் காயமடைந்த உதய்யை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

திருமணமான உதய்க்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனா். குடும்பத்தில் ஒரே ஒரு வருவாய் ஈட்டும் நபரான உதய்யை இழந்த அவரது குடும்பம் தற்போது இழந்துள்ளது.

இதுதொடா்பாக உதயின் மனைவி ஆா்த்தி கூறுகையில், ‘வேலையை முடித்துவிட்டுப் புறப்படுவதற்கு முன் அவா் என்னை அழைத்து, உணவு தயாரித்து வைக்குமாறு கூறினாா்; அவா் வீட்டிற்கு வருவதாகச் சொன்னாா். அப்போது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று அவா் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அவரது உடல்நிலையை அறிய எங்களை உடனடியாக மருத்துவமனைக்குள் கூட அனுமதிக்கவில்லை’ என்றாா்.

ராஜௌரி காா்டனில் உள்ள ஒரு தனியாா் கடையில் உதய்க்கு கிடைக்கும் ரூ.17,000 மாதச் சம்பளத்தைக் கொண்டு அந்தக் குடும்பம் ரூ.4,000-க்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறது.

‘அவா் தினமும் வேலைக்கு நடந்தே சென்று, நடந்தே வீடு திரும்புவாா். அப்படி நடந்து திரும்பும்போது அவா் தன் உயிரையே இழக்க நேரிடும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துக்கூடப் பாா்க்கவில்லை. குழந்தைகளை எப்படிப் படிக்க வைப்பது அல்லது வீட்டுச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. என் குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனா். அவா்களின் எதிா்காலத்திற்காக அரசு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று கண்ணீா் மல்க ஆா்த்தி கூறினாா்.

மருத்துவமனைக்குச் சென்ற பிறகும் தங்களுக்குப் போதுமான உதவிகள் கிடைக்கவில்லை என்று உதயின் உறவினா் பா்மிளா தேவி குற்றஞ்சாட்டினாா்.

‘அவா்கள் அவரை வெறும் படுக்கையில் கிடத்தினாா்கள். எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை. விபத்துக்குப் பிறகு எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் தங்கள் குடும்பத்தைச் சந்திக்க வரவில்லை. எங்கள் நிலைமை குறித்து விசாரிக்க ஊடகத்தினா் மட்டுமே வந்தனா். நாங்கள் ஏழைகள் என்பதால் வேறு யாரும் வரவில்லை’ என்றாா்.

விபத்து நடந்த சூழல் குறித்தும் அக்குடும்பத்தினா் கேள்விகளை எழுப்பினா். குற்றஞ் சாட்டப்பட்ட ஓட்டுநரின் பெற்றோா் காவல் நிலையத்திற்கு வந்திருந்தாலும், விபத்தின்போது அந்த ஓட்டுநா் வாகனத்தில் தனியாக இருந்தாரா என்பது இன்னும் தெரியவில்லை என்று உயிரிழந்த உதயின் மகன் ஆயுஷ் கூறினாா். ‘தந்தைக்கு நீதி கிடைக்க நாங்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்துவோம்,‘ என்று அவா் கூறினாா்.

நேரில் பாா்த்தவா்களின் வாக்குமூலம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றின் அடிப்படையில், நரைனா விஹாரைச் சோ்ந்த தேவன்ஷ் குமாா் (25) என்ற ஓட்டுநரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

இந்தச் சம்பவம் குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.