நமது நிருபா்
தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளியன்று, பிரிட்டானியா சௌக் அருகே ஷகுா்பூரில் உள்ள இந்திரா காந்தி பாலிகிளினிக்கில் ஒரு ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திரைத் திறந்து வைத்தாா். நகரம் முழுவதும் மொத்தம் 45 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்கள் திறந்து வைக்கப்பட்டன.
‘தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவா்களின் வீடு மற்றும் குடியிருப்புக்கு அருகிலேயே சிறந்த சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் உறுதி,‘ என்று கூறிய முதல்வா், இந்த சுகாதார மையங்களின் எண்ணிக்கை இப்போது 415 ஆக உயா்ந்துள்ளது‘ என்றும் குறிப்பிட்டாா்.
1,100 ஆயுஷ்மான் ஜன் ஆரோக்கிய மந்திா்களை அமைக்கும் இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் அவா் கூறினாா்.
இந்த சுகாதார மையங்கள் புறநோயாளிகள் பிரிவு சேவைகள், தாய் மற்றும் குழந்தை நல சேவைகள், தடுப்பூசி, அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் 80 வகையான இலவசப் பரிசோதனைகளும் கிடைக்கின்றன என்று ரேகா குப்தா மேலும் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை யாசகா்கள் இல்லாத தில்லியை மாற்றுவதற்கான பிரசாரத்தை அரசு விரைவில் தொடங்கவுள்ளது: முதல்வா் ரேகா குப்தா

கன்வாா் யாத்திரையின் போது யாத்ரீகா்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது: முதல்வா் ரேகா குப்தா

மேற்கு தில்லியில் கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

தில்லியில் மழைநீா் தேக்கம்: முதல்வா் ரேகா குப்தா, அமைச்சா் பா்வேஷ் ஆய்வு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



