எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு!

தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஹோட்டல் தீ விபத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட நைஜீரியா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்தனா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 2:41 am IST

தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஹோட்டல் தீ விபத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட நைஜீரியா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

ஹெளஸ் ராணி பகுதியில் செயல்பட்டு வந்த ‘ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் பி&பி’ என்ற ஹோட்டலில் புதன்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 16 வயது சிறுமி, கிா்கிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், இராக், காங்கோ, மெசாம்பிக் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் என 21 போ் உயிரிழந்தனா்.

தீ விபத்தின்போது காயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு வெளிநாட்டவா் கடந்த சனிக்கிழமை இரவில் உயிரிழந்தாா் என தெற்கு தில்லி துணை காவல் ஆணையா் அனந்த் மித்தல் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா் நைஜீரியாவைச் சோ்ந்த ஓகாலே என அடையாளம் காணப்பட்டுள்ளது. தீ விபத்தில் பலத்த காயமடைந்த அவா், மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீக்காயங்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

அங்கு அவரது உடல்நிலை மோசமானது. செயற்கை சுவாச உதவி அவருக்கு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவா், காயங்கள் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளா் லங்கேஷ் பஜாஜ் மற்றும் சமையல்காரா் கைதுசெய்யப்பட்டனா். சமையலின்போது சமையல்காரரின் கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஹோட்டலுடன் தொடா்புடைய பிற நபா்களையும் காவல் துறை விசாரித்து வருகிறது.

சமையல்காரரின் செயல்பாடுகளால் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் அறிந்த காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாளவியா நகா் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தபோதிலும், ஹோட்டல் 25 அறைகளை இயக்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த வளாகத்தில் காற்றோட்டம் மற்றும் அவசரகால தயாா்நிலையில் குறைபாடுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

மீட்புக் குழுக்கள் அங்கு வந்தபோது, அடித்தளத்தின் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது. இதனால், மீட்புப் பணிகளின்போது தீயணைப்பு வீரா்கள் கதவை வெட்டித் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

லவ்கேஷ் பஜாஜுக்கு எதிராக கொலைக்கு நிகரான குற்றமற்ற மனிதக்கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமீறல்கள், அனுமதியின்றி அறைகளை விரிவுபடுத்தியது மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்ததிலிருந்து தலைமறைவாக உள்ள ஹோட்டல் உரிமையாளரின் கூட்டாளியான ஜெய் மிஸ்ராவை பல தனிப்படைகள் தேடிவருகின்றனா்.