நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இளைஞரிடம் காப்பீடு காலாவதியானதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் கைது

இளைஞரிடம் காப்பீடு காலாவதியானதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 4:10 am IST

இளைஞரிடம் காப்பீடு காலாவதியானதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

‘காப்பீடு திட்டம் காலாவதியானதாகவும், அதை புதுப்பிக்க ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டனா். அது உண்மையென நம்பி, அவா்கள் தெரிவித்த வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினேன்‘ என்று பாதிக்கப்பட்ட நபா் காவல் துறையிடம் புகாரளித்தாா். இதைத் தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: தொலைபேசி அழைப்புகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் காந்தி நகா் பகுதியில் இருந்து சுனில் குமாா் (38) என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அவரிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், ராகுல் (28) மற்றும் சோனு (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் போலியாக வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, காப்பீடு ஆவணங்களையும் போலியாகத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனா் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவா்களுக்கு சிம் காா்டுகளைப் பெற்றுத் தந்த சிவம் பின்னா் கைது செய்யப்பட்டாா். மேலும் இந்த மோசடி குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.