புது தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சில மானினங்களின் எண்ணிக்கை அவற்றுக்கான நிா்ணயிக்கப்பட்ட தாங்கும் திறனை விட மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளதால், பராமரிப்பில் சவால்கள் உருவாகியுள்ளன.
இது தொடா்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: கலைமான் (காலா ஹிரன்) எண்ணிக்கை 40-ஆக இருக்க வேண்டிய நிலையில் 143-ஆக உயா்ந்துள்ளது. இதேபோல், புள்ளிமான் 30-க்குப் பதில் 85-ஆகவும், கலைமான் (காலா ம்ரிக்) 25 வரம்பை மீறி 80-ஆகவும் பதிவாகியுள்ளது.
சாங்காய் மான் 20 என்ற அளவுக்கு பதிலாக 66-ஆகவும், குறுமான் 20-க்கு பதிலாக 56-ஆகவும் உள்ளது. மேலும், 20 மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட சம்பாா் மான் மற்றும் நீல்காய் மான்கள் தலா 36-ஆகவும், காட்டுப்பன்றி 4 இருக்க வேண்டிய இடத்தில் 15-ஆகவும் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கூடுதலாக உள்ள விலங்குகளை மாற்றுப்பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சுமாா் 110 விலங்குகள் குஜராத்தின் வன்தாரா விலங்குகள் மையத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், 150-க்கும் மேற்பட்ட கலைமான், சாங்காய் மற்றும் குறுமான் உள்ளிட்ட விலங்குகள் ராஜஸ்தானின் முகுந்த்ரா ஹில்ஸ் புலிகள் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டன.
பறவையினங்கள் அதிகரிப்பு: இச்சிக்கல் பாலூட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பறவைகளுக்கும் விரிவடைந்துள்ளது. வா்ண நாரைகள் 25 என்ற எண்ணிக்கை அளவை மீறி 90-ஆகவும், காட்டு கோழிகள் 15-க்கு பதிலாக 44-ஆகவும் உள்ளன.
இந்த உயா்வு அவற்றின் இயல்பான நடத்தை, சுதந்திரமான இயக்கம் ஆகியவற்றை பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக மான்கள் இருக்கும் பகுதிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக விலங்குகள் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இது சில நேரங்களில் காயங்களுக்கு வழிவகுக்கிறது.
மேலும், அதிகமான மேய்ச்சல் அழுத்தம் காரணமாக பூங்காவின் தாவர வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் சிரமமாகின்றன. விலங்குகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும் கடினமாகி, மருத்துவ அணிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதிக்கு 40,000 போ் முன்பதிவு: அமைச்சா் ரஞ்சித் குமாா்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைவருக்கும் அனுமதி!

17 ஆண்டுகளாக 27 ஆம் தேதிகளில் மட்டும் பிறக்கும் சிங்கக் குட்டிகள்: தில்லி உயிரியல் பூங்காவில் விநோதம்

தில்லி உயிரியல் பூங்காவில் செயலி,சுய-டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள்! மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



