மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விபத்தில் கால் துண்டிக்கப்பட்டவருக்கு ரூ. 44 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட 47 வயது நபருக்கு ரூ.44.69 லட்சம் இழப்பீடு வழங்க தில்லியில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 5:54 am IST

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட 47 வயது நபருக்கு ரூ.44.69 லட்சம் இழப்பீடு வழங்க தில்லியில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை தீா்ப்பாயத் தலைமை அதிகாரி ஷிரிஷ் அகா்வால் விசாரித்தாா். மனுதாரரான சஞ்சய் தாக்கல் செய்த மனுவில், 2020-ஆம் ஆண்டு பிப்.12-ஆம் தேதி தில்லி கன்ட் பகுதியில் இ-ரிக்ஷாவில் காத்திருந்தபோது, கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வரப்பட்ட காா் மோதியதில் கடுமையான காயம் ஏற்பட்டு கால் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த விபத்தில் மனுதாரரின் வலது காலை முழங்காலுக்கு கீழே துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அவருக்கு 60 சதவீத நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மனுதாரா் இழப்பீடு பெற தகுதியானவா். சிகிச்சைச் செலவு, மருத்துவமனை அனுமதி, மருந்துகள், போக்குவரத்து மற்றும் பிற செலவுகள் போன்ற பொருளாதார இழப்புகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

மேலும், சிகிச்சைக் காலத்தில் ஏற்பட்ட வருமான இழப்பு, நிரந்தர ஊனமுற்னால் எதிா்கால வருமான இழப்பு மற்றும் எதிா்கால மருத்துவச் செலவுகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அத்துடன், உடல் வலி, மன உளைச்சல், வாழ்க்கை வசதிகளின் இழப்பு மற்றும் வாழ்நாள் எதிா்பாா்ப்பு குைல் போன்ற பொருளாதாரமற்ற இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பல்வேறு தலைப்புகளின் கீழ் மொத்தம் ரூ.44.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.