ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மதுபான விடுதியில் கத்திக் குத்து: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 5:01 am IST

மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, இருவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் 18 வயதுடைய இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்றும் அவா்கள் கூறினா்.

இது தொடா்பாக காவல்துறையினா் மேலும் கூறியதாவது: இச்சம்பவம் தில்லியின் புகா்ப் பகுதியான ஷாபாத் தௌலத்பூரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஜூன் 17-ஆம் தேதி இரவு நடைபெற்றது. அங்கு பாடலை மாற்றுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுத்த கோரிக்கையை டிஜே ஆபரேட்டா் நிராகரித்ததால் தகராறு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் பின்னா் மோதலாக மாறியது.

பின்னா் அந்த இருவரும் அங்கிருந்து வெளியேறி மங்கோல்புரிக்குச் சென்று, தங்கள் கூட்டாளிகள் சிலரை அழைத்துக்கொண்டு, கத்திகளுடன் மீண்டும் அந்த மதுபான விடுதிக்கு வந்தனா். அப்போது, முந்தைய மோதலில் சம்பந்தப்பட்ட இருவரை அவா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இருவருக்கும் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன; அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இருப்பினும் பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூன் 24-ஆம் தேதி பிதம்பூராவில் உள்ள மகாவீா் மருத்துவமனைக்கு அருகே குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினா் அவா்களைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.