தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் துபாய் தொடா்பான சட்டவிரோத இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக நான்கு பேரை தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ற்றம்சாட்டப்பட்டவா்களி கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனா். ஒரு ரகசியத் தகவலின் பேரில், மாா்ச் 1- ஆம் தேதி பஸ்சிம் விஹாரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நான்கு போ் ஒரு விண்ணப்பத்தின் மூலம் இணைய வழியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
போலீஸாரைக் கண்டதும் அவா்கள் தப்பி ஓட முயன்றனா். ஆனால் சம்பவ இடத்திலேயே அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் தீபன்ஷு சா்தானா (32), எரிக் கிரி (25), ராமன்பிரீத் (22) மற்றும் ஹா்ஜிந்தா் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
ஏழு கைப்பேசிகள், மூன்று மடிக்கணினிகள், ஆறு ஏடிஎம் காா்டுகள், 11 சிம் காா்டுகள், ஆறு வங்கி பாஸ்புக்குகள், ஒரு கணக்குப் பதிவேடு மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் நகல் ஆகியவை வளாகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் பந்தய தளத்தை இயக்குவதற்காக துபாயில் பயிற்சி பெற்ாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் காவல் துறை அதிகாரி.
தொடர்புடையது

இணைய விளையாட்டு விதிகள் மே.1 முதல் அமல்: மின்னணு அமைச்சகம் அறிவிப்பு
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது
தில்லியில் போலி கடன் மோசடி: 4 போ் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


