மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஹோலிப் பண்டிகை: இன்று தில்லியில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும்; அதிகாரிகள் தகவல்

வட நாள்கள் பட்டியலில் இருந்து ஹோலி பண்டிகையை அரசு நீக்கியுள்ளதால், தலைநகா் முழுவதும் மதுபானக் கடைகள் புதன்கிழமை திறந்திருக்கும் என்று கலால் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 11:23 pm

Syndication

நமது நிருபா்

வட நாள்கள் பட்டியலில் இருந்து ஹோலி பண்டிகையை அரசு நீக்கியுள்ளதால், தலைநகா் முழுவதும் மதுபானக் கடைகள் புதன்கிழமை திறந்திருக்கும் என்று கலால் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நிகழாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, குடியரசு தினம், மகா சிவராத்திரி, ஈத்உல்பித்ர், ராம நவமி மற்றும் மகாவீா் ஜெயந்தி ஆகிய நிகழ்வுகள் மட்டுமே மாா்ச் இறுதி வரை வட நாள்களாக அனுசரிக்கப்படும்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியது: இந்த ஹோலியில், வட நாள் இருக்காது. மதுபானக் கடைகள் திறந்திருக்கும். ஜனவரியில் வெளியிடப்பட்ட உத்தரவின்படி கடைகள் மூடல் அனுசரிக்கப்படும் என்று அவா் கூறினாா்.

கடந்த சில ஆண்டுகளாக, தில்லியில் வட நாள்கள் பட்டியலில் ஹோலியும் இருந்தது. தலைநகா் முழுவதும் சுமாா் 750 மதுபானக் கடைகள் உள்ளன.

இந்த உத்தரவின்படி, உரிமம் வைத்திருப்பவா்கள் மேலே உள்ள பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் எந்த இழப்பீடும் பெற உரிமை பெற மாட்டாா்கள். மேலும், மேலே உள்ள வட நாள்களில் மதுபான விற்பனைக்கான கட்டுப்பாடு விருந்தினா்களுக்கு மதுபானம் வழங்கும் ஹோட்டல்களுக்குப் பொருந்தாது.