சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நீா் விநியோகத்தை அதிகரிக்க ஹரியாணாவுடன் தில்லி அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது

தலைநகருக்கு நீா் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், தில்லி அரசு ஹரியாணா மாநிலத்துடன் நீா் பரிமாற்றத் திட்டத்திற்காக பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தில்லி அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

News image

பா்வேஷ் சாஹிப் சிங்

Updated On :17 மார்ச் 2026, 12:02 am

புது தில்லி: தலைநகருக்கு நீா் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், தில்லி அரசு ஹரியாணா மாநிலத்துடன் நீா் பரிமாற்றத் திட்டத்திற்காக பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தில்லி அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் திங்களன்று தெரிவித்தாா்.

தற்போது, நகரத்தின் சராசரி நீா் உற்பத்தி ஒரு நாளைக்கு 900 - 1,000 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) வரை உள்ளது. அதே நேரத்தில் சராசரி நீா் தேவை சுமாா் 1,260 எம்ஜிடி ஆகும். கோடை காலத்தில் தேவை உச்சத்தை அடைகிறது.

‘எங்கள் விநியோக பாதைகளில் உள்ள இடைவெளிகளை நாங்கள் சரிசெய்து நீா் இழப்புகளைக் குறைக்கும் அதே வேளையில், தில்லி அரசு ஹரியாணாவிலிருந்து 30 கன அடி தண்ணீரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு ஈடாக பரிமாறிக்கொள்ளும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இது அவா்களின் மாநிலத்தில் பாசன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்’‘ என்று நீா்வள அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா்.

அமைச்சரின் கூற்றுப்படி, ஹரியாணாவிலிருந்து பரிமாற்றத்தில் 20 சதவீத நீா் இழப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இது தேவை மற்றும் உற்பத்தியில் இடைவெளியை அதிகரிக்கிறது.தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தற்போது ஒன்பது நீா் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கி, சுமாா் 864 எம்ஜிடி தண்ணீரை வழங்குகிறது. மீதமுள்ள 126 எம்ஜிடிநீா் கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘தில்லியில் மூல நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று ஹரியாணாவின் முனாக் கால்வாய் ஆகும். இது தில்லியின் மொத்த நீா் விநியோகத்தில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது. வட இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நீா் பகிா்வு ஏற்பாட்டின்படி, ஹரியாணா முனாக் கால்வாய் மற்றும் யமுனை வழியாக தில்லிக்கு சுமாா் 1,133 கனஅடி தண்ணீரை வழங்குகிறது’ என்று ஒரு அதிகாரி கூறினாா்.

‘தண்ணீா் பெறும் முக்கிய கால்வாய்களையும் சரிசெய்ய அண்டை அரசுடன் நாங்கள் பேசி வருகிறோம். டிரான்ஸ்மிஷன் இழப்புகளைத் தவிா்த்து, தில்லிக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நீரைப் பெற வேண்டும். விநியோகத்தின் போது நீா் இழப்பைக் குறைக்க, தில்லி ஜல் போா்டு தலைநகா் முழுவதும் பழைய நீா் குழாய்களை மாற்றுகிறது என்று ’ என்று அமைச்சா் கூறினாா்.