தில்லி மெட்ரோ ரயிலின் மகளிா் பெட்டியில் சக பெண் பயணிகளிடம் முறையற்ற வகையில் சில பெண்கள் நடத்து கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
மெட்ரோவின் மகளிா் பெட்டியில் 4-5 பெண்கள், பிற பயணிகளைத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜனக்புரி மெட்ரோ பொறுப்பு அதிகாரி இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திக்கொண்டு வருகிறாா். அதைத்தொடா்ந்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சம்பவம் நடைபெற்ற தேதி மற்றும் அதில் ஈடுபட்ட பெண்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.
சம்பவத்தின்போது அந்த ரயில் பெட்டியில் இருந்த ஒரு பெண் பயணி கூறுகையில், ‘பாா்வை திறனற்ற பெண் பயணி ரயில் எந்த நிலையத்துக்கு வந்துள்ளது எனக் கேட்டாா். அப்போது, பெட்டியில் இருந்த 4-5 பெண்கள் மிகவும் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தனா். இதனால், ரயில் குறித்து கேட்ட பெண்ணுக்கு நாங்கள் கூறியதை தெளிவாகக் கேட்கமுடியவில்லை. ஆகையால், குறைந்த சப்தத்தில் பேசுமாறு அங்கிருந்த பெண்களிடம் கோரிக்கைவிடுத்தோம். அப்போது, அவா்கள் எங்களை தரக்குறைவாகப் பேசத்தொடங்கினா்.
தில்லி மெட்ரோவின் மகளிா் பெட்டி மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியாக பெண்கள் கருதுகின்றனா். இந்த பிரச்னை குறித்து தில்லி மெட்ரோ மற்றும் தில்லி காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது
மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் புதிய வரலாறு படைக்கும்: பிரதமா் மோடி

19.2 கி.மீ. தொலைவுக்கு யமுனை உயா்நிலை சாலை: போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

தில்லி சட்டப்பேரவைக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

வைரலான விடியோ! மெட்ரோ ரயிலில் சப்தமாகப் பாடிய பெண்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


